Breaking News

Monday, 17 September 2012

நயனதாரா 'பெயில்' ஆனால் உதயதாரா 'பாஸ்'!

நடிகை உதயதாராவுக்கும், துபாயைச் சேர்ந்த பைலட் ஒருவருக்கும் வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.

தீ நகர், கண்ணுக்குள்ளே, மலையன், பயம் அறியான், கண்ணும் கண்ணும், லீலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் உதயதாரா. வழக்கம் போல இவரும் கேரளாவைச் சேர்ந்த நாயகிதான்.

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு, சரியாக பிரேக் பிடிக்காமல் போனவர் இவர். இருந்தாலும் தற்போதும் இவர் கையில் வேட்டையாடு, பிரம்மபுத்ரா என இரண்டு படங்கள் இருக்கிறதாம்.

தமிழ் தவிர மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சியமாகியுள்ளது. 

அவர் துபாயைச் சேர்ந்த பைலட் ஜுபின் ஜோசப் என்பவரை மணக்கிறார். அவர்களின் நிச்சயதார்த்தம் வரும் மார்ச் மாதம் உதயதாராவின் சொந்த ஊரான கோட்டயத்தில் நடக்கிறது. நிச்சயம் முடிந்த அடுத்த மாதமே அதாவது ஏப்ரல் மாதம் கேரளாவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

அனன்யாவுக்கு சமீபத்தில்தான் தாம்பூலம் மாற்றினார்கள். சினேகாவுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது. இந்த வரிசையில் உதயாதாரவும் சேருகிறார்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates