தமிழ் படங்களில் நடிக்கும் தெலுங்கு, மலையாள நடிகைகள் தங்கள் பெயர்களுடன் சாதிப் பெயர் களை இணைத்துள்ளனர். சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், நவ்யா நாயர், மேகா நாயர், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, நித்யா மேனன், ஸ்வேதா மேனன், ஸ்வாதி வர்மா என பலர் சாதி பெயர்களை சேர்த்து வைத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இயக்குனர்கள் பாலா, சேரன் போன்றோர் நடிகைகள் சாதி பெயர்களை வைக்கக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர்.
இதனை பல நடிகைகள் ஏற்கவில்லை. இதுகுறுத்து சமீரா ரெட்டி, எனது குடும்ப பெயரைத்தான் சேர்த்து வைத்துள்ளேன் என்று சாதி பெயரை நீக்க மறுத்து விட்டார். ஜனனி ஐயரும் சாதி பெயரை நீக்க மறுத்துள் ளார்.
இது குறித்து அவர், ‘’நடிகைகள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயர்களை வைப்பது தவறல்ல. நான் ஐயர் பெயரை நீக்கமாட்டேன்’’என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment