ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் கலகலவென்று பேசும் நயன்தாரா தற்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறாராம்.
நயன்தாரா முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் நடிகர், நடிகைகள் முதல் லைட் பாய் வரை அனைவருடனும் தான் ஒரு ஹீரோயின் அதுவும் முன்னணி ஹீரோயின் என்ற கர்வமே இல்லாமல் கலகலப்பாக பேசுவார். ஆனால் தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததையடுத்து இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளார் நயன்.
காதலுக்கு முன்பு செட்டில் கலகலப்பாக இருந்த நயன் தற்போது யாருடனும் பேசாமல் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக உள்ளாராம். இதைப் பார்ப்பவர்கள் அய்யோ பாவம் நயன்தாராவை இந்த காதல் பிரிவு படுத்தும் பாட்டைப் பார்க்கவே பாவமாக உள்ளது என்கிறார்களாம். அவர் தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிடப்படாத படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார்.
அவர் மீண்டும் தமிழ், தெலுங்கு என்று பிசியானாலும் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து அவர் முழுவதுமாக மீளாதது போன்றே தெரிகிறது. விரைவில் பழைய கலகலப்பான நயனைப் பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
No comments:
Post a Comment