Breaking News

Tuesday, 18 September 2012

என்னது? நித்தியின் அடுத்த இலக்கு நயன்தாராவா? புதுசா கிளம்பும் ஸ்டோரி!


ராகசுதா, ரஞ்சிதா, யுவராணி, கௌசல்யா வரிசையில் அடுத்து வரப்போவது ‘பரபரப்பு புகழ்’ நயன்தாராவாம்! நித்தியானந்தாவை பற்றிய சர்ச்சைகளை நிறையவே கேள்விப்பட்டவர் தான் நயன்தாரா. ஆனாலும், தற்போது மன நிம்மதியின்றி தவிக்கும் நயன்தாராவை எப்படியும் மடத்துக்கு கொண்டுவந்து விடலாம் என நினைக்கிறார்கள் நித்தியின் அடிவருடிகள்.
வழக்குகள், பத்திரிக்கைகளின் தாக்குதல்கள், இந்து அமைப்புகளின் எதிர்ப்புகள் எல்லாமே நித்தியானந்தாவுக்கு சிக்கலாக அமைந்தாலும், ஒருவிதத்தில் அவை அனைத்துமே அவருக்கு செலவே இல்லாத பிரசித்தியை கொடுப்பதை யாரும் மறுக்க முடியாது. கார்ப்பரேட் சாமியார்களுக்கு அவசியமானதே சர்ச்சைகளும் பிரபலங்களின் வருகையும்தான்.
அரசியல் நிகழ்வுகளையே மாற்றும் சக்தி படைத்தவராக உலா வரும் சந்திரா சாமி மீது கிளம்பாத சர்ச்சைகளா? நித்தியும் இத்தகைய சர்ச்சைகளை விரும்பக் கூடியவர்தான். அதனால்தான், இத்தகைய இக்கட்டான சூழலிலும் நயன்தாரா மீது நித்தியின் கண்கள் நிலைகுத்தி இருக்கின்றன.
பிரபுதேவா பிரிவுக்குப் பிறகு தற்போது தனிமையில் தவிக்கிறார் நயன். மறுபடியும் சிம்பு போன்றவர்களின் அழைப்புக்கு இரையாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் அவருக்கு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைத்தான் நித்தியின் ஏஜெண்டுகள் சரியாகக் கணித்து நயன்தாராவை நெருங்கி இருக்கிறார்கள்.
நித்தியின் ஹீலிங் தெரபி பற்றி இவர்கள் எடுத்துச் சொல்ல, நயன்தாரா ஆர்வமாகக் கேட்டுக் கொண்டதாகத் தகவல்! அதனால், விரைவில் நித்தி – நயன் சந்திப்பு நிகழும் என்கிறார்கள் நித்தியின் ஆதரவாளர்கள்.
அதற்குள் நித்தியின் லீலைகள் குறித்து யாராவது நயனுக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். இல்லையேல் எண்ணெய்க்குப் பயந்து நெருப்பி குதித்த கதையாகிவிடும்!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates