சரத், வீரா கதாநாயகர்களாக நடிக்கும் படம், “ரணம்! இவர்களுடன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய்சேகரன் இயக்கும் இந்தப் படத்தை, வி.சினிமா குளோபல் நெட்வெர்க், அகவொளி பிலிம்ஸ், எ வேல்யூ பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் பாடல் காட்சி ஒன்றிற்காக, மூணார் அருகே உள்ள, மிக உயரமான கொழுக்கு மலை உச்சிக்கு, படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்கேயே தங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. காட்டு விலங்குகளின் நடமாட்டம் அங்கு அதிகம் என்பதால், கதிகலங்கிய படத்தின் நாயகி சுவாசிகா, இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல், மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். “மலை உச்சிக்கு வந்து வசமா மாட்டி விட்டுட்டீங்களே என, இயக்குனரிடம் புலம்பி தீர்த்திருக்கிறார்.

No comments:
Post a Comment