மும்பை: தனக்கும் பாலிவுட் நடிகர் சைப் அலி கானுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக இந்தி நடிகை கரீனா கபூர் குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூருக்கும், நடிகர் சைப் அலி கானுக்கும் வரும் 16ம் தேதி திருமணம் என்று சைபின் தாயார் ஷர்மிளா தாகூர் அறிவித்தார். ஆனால் இது குறித்து மணமக்கள் வாய் திறக்கவேயில்லை.
இந்நிலையில் கரீனா புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது தனக்கும், சைபுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதை சட்டப்படி பதிய வேண்டிய வேலை மட்டுமே பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்ப புரிகிறது ஏன் இரண்டு பேரும் இத்தனை நாட்கள் அமுக்குனியாக இருந்தார்கள் என்று.
அவர்கள் திருமணத்திற்காக பாலிவுட்டே தயாராகிக் கொண்டிருந்தது. தற்போது திருமணம் முடிந்துவிட்டது என்று கரீனா தெரிவித்துள்ளதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கவலைப்படாதீங்க கண்டிப்பாக பார்ட்டி கொடுப்பார்…
கரீனா நடிப்பில் அண்மையில் வெளியான ஹீரோயின் படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment