வாயை திறந்தா வயலின். பாடினா பியானோன்னு கோடம்பாக்கத்தில் அடுத்தஆன்ட்ரியாவாக இருக்கிறார் விபா. அரவிந்த்சாமியின் தங்கை என்றால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள். துண்டு துக்கடா கேரக்டர்களுக்கும் மேலாக ஹீரோயினுக்கும் கீழாக திரிசங்கு சொர்கமாக இருக்கிறது விபாவின் சினிமா கிராஃப். விரைவில் வரப்போகும் மதில்மேல் பூனைதான் இவரது ஸோலோ பர்பாமென்சை சொல்லப் போகுது. இருக்கட்டும்… நாம் சொல்லப் போகிற செய்தி வேறொன்று.
இந்த விபா விரலழகி மட்டுமல்ல, குரலழகியும் கூட. நான் படத்தில் விஜய் ஆன்ட்டனியுடன் நடித்துக் கொண்டிருந்தாராம். இவரது குரலை கேட்ட ஆன்ட்டனி என் அடுத்த படத்தில் உனக்கொரு பாட்டு தர்றேன் என்று வரம் கொடுத்திருக்கிறார்.
முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் வலிய வந்து பாட்டு பாட சான்ஸ் கொடுப்பதும், அதை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்வதும் எத்தனை நடிகைக்கு வாய்க்கும்?
இவர் நடித்து வெளிவர வேண்டிய மிச்ச மீதி படங்களும் வெளிவந்தால், விபாவுக்கு ரசிகர் மன்றம் ரெடியாகிவிடும். இப்பவே கீற்று பின்ன ஆர்டர் கொடுத்திருப்பாங்களே..
No comments:
Post a Comment