ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. அதையடுத்து ஓரிரு படங்களிலேயே ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்வரிசை நடிகையானார். இருப்பினும் அதன்பிறகு அவர் நடித்த கந்தசாமி உள்ளிட்ட சில படங்கள் தோல்வி அடைந்ததால் உயரத்தில் பறந்த ஸ்ரேயாவின் மார்க்கெட் அதிரடியாக இறங்கியது.
இதனால் அண்டை மாநில மொழிப்படங்களில் நடித்தபடி தற்போது சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வருகிறார் ஸ்ரேயா. இந்த நிலையில், ரஜினியின் சிவாஜி படம் 3டி தொழில் நுட்பத்துக்கு மாற்றபபட்டு வரும் சேதி கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்தார் நடிகை. படத்தை காண்பிப்பதற்கு தன்னையும் அழைப்பார்கள் என்று காத்திருந்தார். ஆனால் யாரும் இதுவரை அவரை கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அடுத்தகட்ட முயற்சியாக தானே வலிய சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்பது என்று முடிவெடுத்திருக்கிறார் ஸ்ரேயா.
No comments:
Post a Comment