
ஆனால் அமலாவை நேரில் வரவழைத்த பூரியார், ‘’ இன்னையிலருந்து தினமும் ஜிம்முக்குப் போய் வெயிட்டை கூடுமானவரைக்கும் குறைச்சிக்கிட்டு, ரெகுலரா என்னை வந்து பாக்கனும். நான் ஷூட்டிங் கிளம்புறப்ப, நீ ஓ.கே.ன்னு தோணினாத்தான் நீ ஹீரோயின். ஸ்லிம் ஆகலைன்னா நீ படத்தை விட்டு ஸ்லிப் ஆகவேண்டி வரலாம்’ என்று மிரட்டி அனுப்பிவைத்தாராம்.
இதையொட்டி தினமும் ஜிம்முக்கு போக ஆரம்பித்திருக்கும் அமலா, ஒரு நாளைக்கு மூன்றுமுதல் நான்கு மணிநேரம் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுகிறாராம்.
’’இந்த உடற்பயிற்சி நேரம்போக மீதி நேரம் அனைத்தையும் எனது செல்லக்காதலனாகிய அவனுடன் தான் செலவிடுகிறேன். அவனை விட்டுப்பிரிவது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது’ – இப்படி ட்விட்டரில் தனது காதலன் என்று அவர் கொஞ்சுவது தான் புதிதாக வாங்கியுள்ள நாய்க்குட்டியை.
’’த்ரிஷா மாதிரி செல்லப்பிராணிகளோட கொஞ்சுனா, நீயும் சீக்கிரமே பெரிய ஸ்டாராகலாம்’’ என்று தனது மேனேஜர் தந்த ஐடியாவால் கவரப்பட்டு வாங்கிய அந்த நாய்க்குட்டிக்கு, முன்னாள் நெருக்கமான ஒரு டைரக்டரின் பெயரை அமலா சூட்டி அழைப்பது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் அண்ட் ஹாட்டஸ்ட் நியூஸ்.
No comments:
Post a Comment