'முதல்வரம்மாவுக்கு தங்க மனசு' என்று ஓப்பன் பேட்டி கொடுத்து சமாதானக் கொடியை பறக்க விட்டிருக்கிறார் வடிவேலு. முதல்வர் கலந்து கொண்ட ஒரு
விழாவில் வடிவேலுவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் அவர் கலந்து கொள்ளவில்லை அதில். இதனால் ஆத்திரமுற்ற சிலர் வடிவேலுவை கண்ட நேரத்தில் போனில் அழைத்து செந்தூர தமிழை காதில் பாய்ச்சியிருக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கியும் வாங்காமலும், அதே நேரத்தில் 'இதை எப்படீடா டீல் பண்ணுறது' என்று வீங்கியும் வீங்காமலும் உடைந்து போனார் வடிவேலு.

ஒரே வழி ஓப்பன் பேட்டிதான் என்று முடிவெடுத்த வைகைப்புயல், மெல்ல தனது வாயை திறந்து அளித்த பேட்டி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இன்டஸ்ட்ரியில். என்ன சொல்லியிருக்கிறார் அவர்?
இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு வந்ததுண்ணே. ஆனால் இது யார் மூலமா வந்தது. உண்மையிலே நமக்குதான் வந்துருக்கானு குழப்பமா இருந்தது. அதோட நாம போனால் அங்க என்ன மாதிரியான சூழல் இருக்கும். உட்கார இடமிருக்குமான்னு பல மனப் போராட்டதுக்கு ஆளானேன். தயக்கமாவும் குழப்பமாவும் இருந்தது. முதலமைச்சரம்மா பெருந்தன்மையா நடந்துகிட்டாலும், கட்சிக்காரங்க கலாட்டா பண்ணிடுவாங்களோன்னு அந்த தயக்கத்தாலதான் நான் போகலண்ணே என்று கூறியிருக்கிறார்.
எலிய புழங்கவிட்டா எச்சம்தான் மிச்சம்னு இன்னும் விரட்டுவாங்களோ, நாலு கரப்பான் பூச்சி செத்துப் போவும் விடுன்னு ஒதுங்குறாங்களோ, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கே வெளிச்சம்.
No comments:
Post a Comment