Breaking News

Wednesday, 12 September 2012

செல்வராகவன் வைத்த விருந்தில் அனுஷ்காவை நாய் கட்சிடிச்சிப்பா!


இயக்குநர் செல்வராகவன் வைத்த விருந்தில் கலந்து கொண்டபோது நடிகை அனுஷ்காவை நாய் கடித்துவிட்டது. அவருக்கு ஊசிகள் போட்டு சிகிச்சை செய்து வருகின்றனர்.டாப் நடிகையான அனுஷ்கா இப்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ மற்றும் ‘தாண்டவம்’ படங்களில் நடித்து வருகிறார்.
‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக பெரும் ரிஸ்க் எடுத்து, கொட்டும் பனியில் ரஷ்யக் காடுகளில் தங்கி நடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா.
எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். சென்னை நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்த இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களும் விருந்தில் பங்கேற்றார்கள்.
அப்போது விருந்தில் சாப்பிட்ட ஒருவர் கையை துடைத்து டிஷ்யூ பேப்பரை வீசி எறிய, அதை ஒரு நாய் கவ்வி எடுத்துத் தின்றதாம். பேப்பரை தின்றால் நாய்க்கு ஏதாவது ஆகிவிடுமே என பதைப்பில், அனுஷ்கா விரைந்து போய் நாய் வாயில் கையை விட்டு பேப்பரை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
அதைப் புரிந்து கொள்ளாத அந்த செல்ல நாய் அனுஷ்கா கையைக் கடித்துவிட்டது.
இதனால் வலி தாங்காமல் துடித்தார் அனுஷ்கா. உடனடியாக அனுஷ்காவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் சிகிச்சை அளித்தனர். அடுத்தடுத்து 3 ஊசிகள் போட்டனர். இன்னும் சிகிச்சை தொடர்கிறதாம்…
நாய் உயிரோட இருக்குல்ல?!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates