Breaking News

Monday, 10 September 2012

நிருபர்கள் தேவை’ தேடித்தவிக்கிறார் தப்ஸிப்பொண்ணு....


பொதுவாக நிருபர்கள் தான் ,பேட்டி,கிசுகிசு மற்றும் சூடான ஸ்டில்கள் வேண்டி நடிகைகளைத் தேடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ’அதில்’ அனுபவம் பெற்ற, நல்ல நிருபர்கள் நாலைந்து பேரை தேடி அலைந்துகொண்டிருக்கிறார் தப்ஸி.
தப்ஸி பத்திரிகை ஏதாவது ஆரம்பிக்கப்போறாரா? சம்பளம் எவ்வளவு தருவார்?? அவர எப்பிடி தொடர்பு கொள்றது என்று துடிப்பவர்கள் ரிலாக்ஸ் ப்ளீஸ். அவர் தேடுவது ஒரு சப்பை மேட்டருக்காக.
அஜீத், ஆர்யா,நயன்தாரா,விஸ்ணுவர்த்தன் காம்பினேஷனில், இன்னும் பெயரிப்படாத படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி கட்டும் தப்ஸி நடிக்கவிருப்பது ஒரு நிருபர் பாத்திரத்தில். ஏற்கனவே அஜீத் துவங்கி யூனிட்டில் உள்ள அத்தனை முக்கிய புள்ளிகளிடமும், பள்ளி மாணவியாக மாறி டமில் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கும் டாப்ஸி, தனக்கு இது மிகவும் முக்கியமான படம் என்று கருதுவதால் கதையில் ஒரிஜினல் நிருபராகவே வாழ விரும்புகிறாராம். அதற்காக, தனக்கு ட்ரெயினிங் கொடுக்கவே, நிருபர்களைத்தேடி வருகிறார் அவர்.
இவர்களது பழக்கவழக்கத்தின் மூலம் செய்தி சேகரிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள், சக நிருபர்களால் ஏற்படும் சஞ்சலங்கள், உடன் வரும் போட்டோகிராபர்களின் இம்சைகளால் உண்டாகும் உபாதைகள் போன்ற பலதகவல்களை ஒரிஜினலாக தெரிந்துகொள்ள விரும்புகிறாராம்.
நம்ம பத்திரிகை துறையில இருக்குற பெண் நிருபர்கள் ரொம்ப டேஞ்சரானவங்க டாப்ஸி. ட்ரெயினிங் தர்ற சாக்குல உங்களை நிருபர் வேலைக்கு அனுப்பிட்டு அவங்க நடிகையாயிருவாங்க. ஏதொண்ணுக்கும் பீ கேர்ஃபுல்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates