Breaking News

Wednesday, 26 September 2012

5 ஆண்டுகளில் 250 முறை ‘தேன்நிலவு’ கொண்டாடிய கரீனாகபூர் …!


பாலிவுட் நடிகை கரீனா கபூர் வரும் டிசம்பரில் தனது கணவர் சைபுடன் சேர்ந்து 250வது தேனிலவைக் கொண்டாடப்போகிறாராம்.பாலிவுட் நடிகை கரீனாவுக்கும் நடிகர் சைப் அலி கானுக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை சைப் அலி கானின் தாய் ஷர்மிஷா தாகூர் தான் வெளியிட்டார். இது குறித்து இத்தனை நாட்களாக வாய் திறக்காத கரீனா தனக்கும், சைபுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதை சட்டப்படி பதிவு செய்ய வேண்டியது தான் பாக்கி என்றும் நேற்று தெரிவித்தார்.
அவரும், சைபும் சேர்ந்து ஒரு வீடு வாங்கி கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாகத் தான் வாழ்கிறார்களாம். இது தவிர வரும் டிசம்பர் மாதம் இருவரும் விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்கின்றனர். இது அவர்களின் 250வது தேனிலவாம். இதை கரீனாவே கூறியுள்ளார்.
5 ஆண்டுகளில் 250வது தேனிலவா? இத்தனை வாட்டியா என்று நினைக்கையில் ஆச்சரியமாகத்தான் உள்ளது கரீனா.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates