Breaking News

Monday, 10 September 2012

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை …!


கல்யாணராமன், மீசை மாதவன் போன்ற மலையாளப் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்த ஜோதிர்மயியை சரண் தனது படத்தில்ஒரு பாடலுக்கு ஆட வைத்தார். அதைப் பார்த்த சுந்தர் சி தனது தலைநகரம் படத்தில் ஹீரோயினாக்கினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் ஜோதிர்மயி.
தமிழுக்கு வரும் போது அவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய். இந்த ரகசியம் பலருக்கு இன்னமும் தெ‌ரியாது. வாய்ப்புகள் அருகிப் போன போது நான் அவன் இல்லை போன்ற படங்களில் படு கவர்ச்சியாக நடிக்கத் துணிந்தார். இது ஜோதிர்மயியின் கணவருக்குப் பிடிக்கவில்லை. தினம் பிரச்சனை. கே‌ரியரா, ஹஸ்பெண்டா…? ஜோதிர்மயிக்கு சாய்ஸ் தேவைப்படவில்லை, கே‌ரியர் என்று கணவ‌‌ரிடம் விவாகரத்து கேட்டார்.
இந்த குடும்ப விவகாரத்தால் சில காலம் நடிக்காமல் இருந்தவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியொன்றை தொகுத்தளித்தார். ஆனால் திருமணமானவர்களையும் கதாநாயகிகளையும் ஹீரோயினாக்கிப் பார்க்கும் பே‌ரிளம் நாடு கேரளா. ஜோதிர்மயிக்கும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஹவுஸ்ஃபுல் என்ற படத்தில் சேல்ஸ் வுமனாக நடிக்கிறார் ஜோதிர்மயி. இவரது கணவர் ட்ராஃபிக் கான்ஸ்டபிள். ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு கடவுள் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தருகிறார். ஆம், நான்கு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார் ஜோதிர்மயி.
படத்தை தமிழில் டப் செய்வீங்களா?

No comments:

Post a Comment

Designed By Blogger Templates