Breaking News

Thursday, 13 September 2012

லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சிக்கு 10 டேக் வாங்கியிருக்கிறார் நடிகர் விமல்.


தான் நடிக்கும் புதிய படத்தில் நாயகிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சிக்கு 10 டேக் வாங்கியிருக்கிறார் நடிகர் விமல். கடந்த இரு நாட்களாக நடிகர் விமலுக்கு வந்த செல்போன் அழைப்புகள் எல்லாமே முத்தக்காட்சி பற்றியதாகவே இருக்கிறாம்.
 ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணுனீங்களா அல்லது இஷ்டப்பட்டுதான் பண்ணுனீங்களா? என்று நண்பர்கள் வேறு ஏகத்துக்கும் கலாய்க்கிறார்களாம். சுவிட்சர்லாந்தில் இஷ்டம் பட சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சங்கதி சென்னை வரைக்கும் வந்து விட்டதால்தான் இப்படி அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறார் விமல்.
 இதுபற்றி விமல் கூறுகையில், சமீபத்தில் இஷ்டம் படத்தோட பாடல் மற்றும் ஒண்ணு ரெண்டு சீன்கள் எடுக்கிறதுக்காக சுவிட்சர்லாந்து போயிருந்தோம்.
 அங்க எடுத்த ஒரு காட்சியில கதையின் அவசியம் கருதி இஷா அகர்வாலுக்கு நான் லிப் டு லிப் முத்தம் கொடுக்கவேண்டி வந்தது. இஷா கூலா இருந்தாலும் எனக்கு பயங்கர டென்சன் இருந்ததால முத்தம் ஓகே ஆக பத்துக்கும் மேல டேக் ஆயிடுச்சி. இதை எப்பிடியோ தெரிஞ்சிகிட்டு என்னோட ஃப்ரண்ட்ஸ் ஒருவாரமா ஓட்டு ஒட்டுன்னு ஓட்டுறாங்க, என்றார்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates