எப்போதெல்லாம் அஜீத் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ, அப்போதெல்லாம் அஜீத்தை சந்திப்பது மிக எளிதாக இருக்கும் முன்னணி பத்திரிகை நிறுவனங்களுக்கு. மற்ற நேரங்களில் யார் போன் அடித்தாலும், பேசுவதற்கு என்ன இருக்கு? என்று தவிர்த்துவிடுவார் அவர். இப்போது திரும்புகிற திசையெல்லாம்
அஜீத் பேட்டிகள். ஓ... பில்லா-2 வரப்போகுதே, அதனால்தான்!

என் படத்தை பற்றி நானே பேசக் கூடாது. அதைப்பற்றி ரசிகர்கள்தான் பேசணும் என்று கூறிவிடும் அவர், அப்புறம் பேசுவது எல்லாமே தத்துவ முத்துகள்தான்.
ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியில் உயிரை பணயம் வைத்து நடிச்சிருக்கீங்களே என்ற கேள்விக்கு வேறு நடிகராக இருந்தால், தான் தலைகீழாக தொங்கிய விஷயத்தை எதிரிலிருப்பவர் தலைகீழாக தொங்கினால் கூட, விடாமல் சொல்லி விலா நோக வைத்திருப்பார். ஆனால் அஜீத் அந்த ரகமல்ல.
கேள்வி கேட்டவரின் வாயை அடைக்கிற மாதிரி ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். என்னவென்று? நம்ம ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆபத்தான வேலைகள் பார்க்கிறார்கள். எவ்வளவு ரிஸ்கான இடங்களில் வேலை செய்கிறார்கள். அதை விடவா இது பெரிசு?
No comments:
Post a Comment