போர்வை கிடைக்குதேன்னு வேட்டிய அவிழ்த்தெறிகிற ஊர் போலருக்குடா இதுன்னுகன்னட ஹீரோ ஒருவரை புலம்ப விட்டிருக்கிறார் நயன்தாரா. இவருக்கும் கன்னட மொழிக்காரர்களுக்கும் அப்படி ஒரு ராசி போலிருக்கிறது. (மாஸ்டருக்கும் கன்னடம்தானே?)

வேறொன்றுமில்லை, அஜீத்துடன் நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கமிட் ஆவதற்கு முன்பாக கன்னடத்தில் சுதீப் என்ற ஹீரோ நடிக்கும் படத்தில் நடிப்பதாக வாய்மொழி சம்மதம் தெரிவித்திருந்தாராம் நயன்தாரா. இந்த நேரத்தில்தான் அஜீத்துடன் நடிக்க வந்தது அழைப்பு. சம்பளமும் ஹெவி. அது போதாதா? சட்டென்று சுதீப்பை தவிக்க விட்டுவிட்டு புதிய படத்தில் கமிட் ஆகிவிட்டார் நயன்தாரா.
ஒரு சின்ன தொகையை அட்வான்சா கொடுத்திருந்தா கூட வளைச்சு பிடிச்சு வம்பை கிளப்பியிருக்கலாம். இப்போ அதுவும் முடியாம போச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் சுதீப்.
வலைக்கு நூல் வாங்கும்போதே வழுக்கறதுக்கு தோள் குலுக்குற ஜாதிங்கடா நாங்கள்ளாம். தெரியும்ல... என்று கொக்கரிக்கிறது நயன்தாரா தரப்பு.
No comments:
Post a Comment