Breaking News

Wednesday, 23 May 2012

அவங்களும் பேசக்கூடாது, நானும் மாட்டேன்... அஜீத் படத்தில் நயன்தாரா நிபந்தனை


பல்லக்கை விட்டு இறங்கவே இல்லை நயன்தாரா. பத்திரமாக சுமக்க அடுத்த தோள்கள் Nayantharaரெடியாகிவிட்டது. தனது சம்பளத்தை எவ்விதத்திலும் குறைத்துக் கொள்ளவோ, அல்லது தனது பலா பலன்கள் விஷயத்தில் எவ்வித காம்ப்ரமைசும் செய்து கொள்ளவோ ஒருபோதும் தயாராக இருந்ததில்லை நயன்தாரா. சில வருட ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் இவருக்கு அவரது எல்லாவித கண்டிஷன்களுக்கும் உட்பட்டு படம் கொடுத்திருக்கிறார் அஜீத்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நயன்தாராதான் நாயகி. இந்த விஷயத்தை வெளியில் விடாமல் ரகசியம் காக்கிறது விஷ்ணுவர்த்தன் தரப்பு. 'எதுவா இருந்தாலும் அது தயாரிப்பாளர் வாயிலே இருந்துதான் வரணும். நான் அவசரப்பட்டு எதுவும் சொல்லக் கூடாது. ஏதாவது கேட்கணும்னா அவரை கேளுங்க' என்று ஒதுங்கிக் கொள்ளும் விஷ்ணுவர்த்தன், நயன்தாராவின் ஒரு கண்டிஷனுக்கு மட்டும் பலமாக தலையாட்டினாராம். மற்றதெல்லாம் தயாரிப்பாளர் பாடு.

அந்த ஒரு கண்டிஷன் என்ன?

படப்பிடிப்பில் பத்திரிகைகாரங்க வந்தா என்னிடம் பேச சொல்லவே கூடாது. நானும் அவங்களிடம் பேச மாட்டேன். இதுதான் நயன்தாராவின் நிபந்தனை.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates