Breaking News

Sunday, 20 May 2012

ஜார்ஜியாவில் அஜீத்... கூடவே மீனாட்சி தீக்ஷித்......


விட்டால் மும்பை பானிப்பூரியை, வடபழனி கமலா தியேட்டரில் இடைவேளை டிஷ்Meenakshi Dixitஆக்குவார்கள் போலிருக்கிறது. அந்தளவுக்கு வடக்குக்கு வழி கொடுத்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். அவர்கள் மட்டும் என்னவாம்? மணிரத்னம் படங்களையெல்லாம் வரிசையாக பணம் கட்டி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ரீமேக் ஜாலம்.

மும்பை நடிகைகளை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது இன்று நேற்று நடக்கிற விஷயமில்லைதான். ஆனால் அது இப்போது ஜாஸ்தியாகியிருக்கிறதோ என்று எண்ண வைக்குமளவுக்கு ஒரே மும்பை மோகினிகளின் வரவுதான் கோடம்பாக்கம் எங்கிலும்.
ஒஸ்தி படத்தில் மல்லிகா ஷெராவத் வந்து ஆட்டம் போட்டுவிட்டு போனார். அவரது முகத்தை துடைத்த மேக்கப் துணி கூட இன்னும் காயவில்லை. அதற்குள் பில்லா -2 படத்திற்காக மும்பையிலிருந்து மீனாட்சி தீக்ஷித்தை வரவழைத்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் சக்ரி.

எப்படி வந்தது இப்படி ஒரு எண்ணம்? சமீபத்தில் தெலுங்கில் வெளியான தூக்குடு படத்தை பார்க்காத சினிமாக்காரர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில்தான் ஒரு பேயாட்டம் போட்டிருக்கிறார் மீனாட்சி. அந்த படமும் ஆந்திராவில் தாறுமாறான ஹிட். சென்ட்டிமென்ட்டும் சாம்பிராணி போட, சட்டென்று பிடித்து வந்துவிட்டார்கள்.

இவரையும் இழுத்துக் கொண்டு ஜார்ஜியாவுக்கு பறந்துவிட்டார்கள் சக்ரியும் அஜீத்தும்

No comments:

Post a Comment

Designed By Blogger Templates