ஓமணக்குட்டிகளின் ஊராகிவிட்டது கோடம்பாக்கம். இங்கே தாக்குப்பிடித்துக் கொண்டிருந்த மும்பை நடிகைகளான ஸ்ரேயா, சமீராரெட்டி
போன்ற அழகிகள் எல்லாம் அரையிருட்டு 'குல்பி' ஐஸ்களாகி ரொம்ப காலம் ஆகிவிட்டது. இந்த நேரத்தில்தான் நீது சந்திரா போன்ற ஒன்றிரண்டு மும்பை ஜீவன்கள் இங்கே பிழைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் ஸ்ட்ரெங்த் சேர்க்க வந்தாரோ என்னவோ, ஷர்மிளா என்ற தங்க மீன் 'மிரட்டல்' படத்திற்கு பிறகு ஓமணக்குட்டிகளை ஒதுங்க வைப்பார் என்ற நம்பிக்கை தருகிறார்.

இத்தனைக்கும் வாய்ப்பு தேடி அலைந்து, 'மிரட்டல்' படத்தின் ஹீரோயின் ஆனவர் இவர். போட்டோவை பார்த்ததும் திருப்தியா இருந்திச்சு. ரெண்டு எக்சர்சைஸ் கொடுத்து செஞ்சுட்டு வாம்மான்னு அனுப்பி வச்சேன். வேற யாராவதுன்னா திரும்பி வந்தே இருக்க மாட்டாங்க. ஆனால் ஷர்மிளா திரும்பி வந்தார். சொல்லிக் கொடுத்ததை செஞ்சார். இந்த படத்திற்காக அவர் ரெண்டு வருஷம் காத்திருந்தார் என்கிறார் படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளருமான மாதேஷ்.
வினய் ஹீரோவாக நடிக்கும் இப்படம் ஆக்ஷன் வித் காமெடி டைப் படமாம். இமேஜ் இல்லாத ஒரு ஹீரோ தேவைப்பட்டாரு. டக்குன்னு என் மனசுக்குள் வந்தவர் வினய்தான். தமிழ்ல ஏற்கனவே ரெண்டு படத்தில் நடிச்சுருந்தாலும், முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவா அறிமுகம் ஆகுறது இதுலதான் என்றார் மாதேஷ்.
என்னோட வலது கை மாதேஷ்தான் என்று ஒரு காலத்தில் டைரக்டர் ஷங்கரால்
பாராட்டப்பட்டவர் இவர். ஓடி ஓடி லொக்கேஷன்கள் பிடித்து தருவதில் கில்லாடி. (ஜீன்சில் வரும் அந்த உலக அதிசய பாடலில் மாதேஷின் உழைப்புதான் அதிகம்) அதே வேகத்தில் இந்த படத்திற்கும் ஓடி ஓடி லொக்கேஷன்கள் பிடித்திருக்கிறார் மாதேஷ்.

லண்டன் பார்லிமென்ட்டில் படம் எடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன்? இங்கு எடுக்கப்பட்ட முதல் படமும் இதுதானாம். அதுமட்டுமல்ல, சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் வீட்டிற்குள்ளும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் மாதேஷ். அசல் படத்தில் சிவாஜி சார் வீட்டின் வெளிப்புறத்தை காட்டியிருப்பாங்க. நான் விட்டிற்குள் எடுக்கணும்னு நினைச்சேன். பிரபு சாரிடம் தயங்கி தயங்கி கேட்டேன். எடுத்துக்கோங்க என்று கூறிவிட்டார் என்றார் மிரட்டல் மாதேஷ்.
நடிச்சிட்டு இருக்கும்போது திடீர்னு பிரபு சார் என்னை ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போனார். அது சிவாஜி சார் ரூம். வாங்குன பதக்கங்கள், பரிசுப்பொருட்களை மட்டும் அங்கு வைச்சிருக்காங்க. பார்க்கும்போதே சிலிர்த்துப்போச்சு என்றார் வினய்.
வினய்யும் ஷர்மிளாவும் சேர்ந்து வந்த இந்த பிரஸ்மீட்டில் திரையிடப்பட்ட பாடல்கள் ரெண்டும் சொன்ன ஒரே விஷயம் இதுதான்.
புல்லரிக்கிற பேனாக்கள் ஃபுல் நேரமும் கிசுகிசுக்க, அடுத்த ஜோடி தயார்ங்க....
No comments:
Post a Comment