Breaking News

Friday, 18 May 2012

ரிச்சா-டாப்ஸி உர்ர்ர்ர்... கண்டுகொள்ளாத அஜீத்


தனது படத்தில் யாரை ஹீரோயினாக்க வேண்டும் என்கிற விஷயத்தில் சம்பளத்தைRicha Gangopadhyayவிட குறியாக இருப்பார்கள் சில ஹீரோக்கள். அந்த ஏரியாவில் அஜீத் கொஞ்சம் வீக் என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பொண்ணாயிருந்தா போதும் என்கிற அளவுக்குதான் அவரது தலையீடு இருக்கும். (பட்டும் படாமலும் இருக்கிற அவரது குணத்தை புரிந்து கொண்டுதான் 'திருப்பதி'யில் நுழைந்து அஜீத்துக்கே மொட்டை போட்டார் பேரரசு. அதை இப்போது நினைத்தாலும் அஜீத் ரசிகர்களுக்கு ஜன்னி வரும்) அதற்குப்பின் உஷாரான அஜீத், ஷுட்டிங் விஷயத்தில் தலையை நுழைப்பது இயல்புதானே?
ஆனால் விஷ்ணுவர்த்தன் இயக்கப் போகும் புதிய படத்தில் கதை கேட்டதோடு சரி. ஹீரோயின் விஷயத்தில் மூக்கை நுழைக்கவே இல்லையாம். அதன்விளைவாக இரு நடிகைகளுக்குள் குடுமிப்பிடி வரும்போல தெரிகிறது.
இப்படத்தில் நயன்தாரா மெயின் ரோலை எடுத்துக் கொள்ள, துணைக்கு டாப்ஸியும் இருக்கிறார் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த ரோலுக்கு முதலில் செலக்ட் செய்யப்பட்டவர் ரிச்சா கங்கோபாத்யா. நேரடியாக அவரை சென்னைக்கு வரவழைத்த விஷ்ணுவர்த்தன், டெஸ்ட் ஷுட்டும் எடுத்தாராம். அட்வான்ஸ் கொடுக்கப் போகிற நேரத்தில்தான் டாப்ஸி ஒரு விவிஐபியிடம் தனக்காக சிபாரிசு செய்யச் சொல்லி ஆட்டத்தை கலைத்தாராம்.
ரிச்சாவுக்கும் நயன்தாராவுக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆகாது என்கிறார்கள். டாப்ஸியின் இந்த முயற்சிக்கு நயன்தாராவும் ஆதரவு தெரிவிக்க, டாப் ஸீக்ரெட்டாக முடிந்தது டாப்ஸியின் வரவு. தான் நீக்கப்பட்டதை அறிந்த நேரத்திலிருந்தே மூச்சை உள்ளிழுத்து முழியை உருட்டிக் கொண்டிருக்கிறாராம் ரிச்சா.
போன்லெஸ் சிக்கனுங்க போடுற சண்டையில யாரு எலும்புக்கு சேதாரம் வரும்னே புரியலையே!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates