Breaking News

Thursday, 3 May 2012

விஷாலுடன் ப்ரணிதா புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...


நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, அமலான்னு கோடம்பாக்கத்தில் கொண்டாடப்படும் அழகுராணிகளுக்கு இன்னும் சில வாரங்களில் இருக்கிறது சரியான சுளுக்கு. உதயன் என்ற படத்தில் அறிமுகமான ப்ரணிதா, இந்த ரிட்டையர்டு தேவதைகளின் நாற்காலியை பறிக்க வந்து கொண்டிருக்கிறார். சகுனி என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் ப்ரணிதாவை அவரது அழகான மூக்கும் முழியும், முதலும் வட்டியுமாக இருந்து வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
இனிமே நடிச்சா எபவ் ஆவரேஜ் ஹீரோக்களுடன்தான் என்று பிடிவாதம் பிடிக்க கற்றுக் கொண்டு விட்டார் ப்ரணிதா. விமல், விதார்த், சிவ கார்த்திகேயன் என்று டுடோரியல் ஹீரோக்கள் ப்ரணிதாவை அப்ரோச் செய்ய, கால்ஷீட் என்ன... காலரைக்கால் ஷீட் கூட இல்லை என்று மறுத்துவிட்டாராம்.
சகுனி திரைப்படம் வெளி வந்தால் விஜய்யோ, அஜீத்தோ... தன் வாழ்க்கையே மாறிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர். இந்த நேரத்தில்தான் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திலிருந்து அழைப்பு போயிருக்கிறது. எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிற புதிய படத்தை திருப்பதிதான் தயாரிக்கிறது. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். சண்டக்கோழி பார்ட் 2 எடுக்கிறேன்னு இவரை இழுத்தார்களாம். அப்புறம் சரவணனுடன் கோர்த்துவிட்டிருக்கிறார்கள். போகிற இடத்திலெல்லாம் பிரச்சனை எதற்கு என்று இதற்கு சம்மதித்திருக்கிறார் விஷாலும். (ச.கோ.2 அப்புறம் வருமாம்)
திருப்பதி பிரதர்ஸ் பெரிய சினிமா கம்பெனி, எங்கேயும் எப்போதும் என்ற சூப்பர்ஹிட் படத்தின் இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தற்போதைய மார்க்கெட் நிலவரம் தடுமாற்றம் என்றாலும் ஒரு காலத்தில் விஷால் ஹிட் ஹீரோ? இதையெல்லாம் கூட்டிக்கழித்துதான் ஓ.கே சொன்னாராம் ப்ரணிதா.
ஊர் குளத்துல துணி துவைச்சா உள்ள கெடக்குற மீனும் வெள்ளையாகும்னு சும்மாவா சொன்னாங்க?

No comments:

Post a Comment

Designed By Blogger Templates