சங்கு ஊதுறவன் காதுல பஞ்சை வச்சு அடைச்சாலும் சத்தம் நிக்கவா போகுது? யார் யாரோ அனுப்புற வக்கீல் நோட்டீசுக்கும், வழக்காடும் போக்குக்கும் கொஞ்சம் கூட ஃபீல் ஆகாம இருக்கிறாராம் தனுஷ். எல்லாம் 3 பட விவகாரம்தான்.
கொலவெறி பாடலின் உட்சபட்ச விளம்பரத்தால் தனுஷ் படம் இதுவரை சந்திக்காதவியாபார எல்லையை தொட்டது 3. படம் வெளிவந்து ரெண்டாவது ஷோவிலேயே ஆஹா, போட்ட பணம் போச்சேன்னு புலம்ப ஆரம்பித்தார்கள் விநியோகஸ்தர்கள். நட்டி குமார் என்ற விநியோகஸ்தர் ஆந்திராவில் தனுஷ் அண் கோ மீது கிரிமினல் வழக்கே போட்டுவிட்டார்.
இதற்கிடையில் தமிழகத்தை சேர்ந்த விநியோகஸ்தர்கள் பலர் நஷ்டத்தை திருப்பிக் கேட்டு தனுஷை துரத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதை எப்படி சமாளிப்பது? மாமனார் ரஜினி தனக்கும் இந்த பட வியாபாரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பிறகும் தனுஷ் போனில் விடாத தொல்லையாம். இதை சமாளிக்க தனுஷே ஒரு காரியம் செய்ததாக சொல்லப்படுகிறது.
உத்தமபுத்திரன் படத்தை தயாரித்த பரணி ஸ்டுடியோஸ் நிறுவனத்தையும் தனது படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு தனக்கு தொல்லை கொடுக்க சொன்னாராம் தனுஷ். தன்னை வைத்து படம் எடுத்து நஷ்டப்பட்ட எல்லாரையும் இப்படி கிளம்ப சொன்னால், ஒரு தீர்வு வரும் என்பது அவரது நம்பிக்கை. ஏம்ப்பா... எல்லாரும் பணத்தை திருப்பி கேட்டா அவரு எப்படி கொடுப்பாரு. நீங்கதானே படத்தை ஆசைப்பட்டு தயாரிச்சிங்க, அல்லது விநியோகம் செஞ்சீங்க. இப்ப வந்து பணத்தை கொடு என்றால் எல்லாருக்கும் கொடுக்க அவரு ஆயுள் முழுக்க ஃப்ரீயாதான் நடிக்கணும். அதெல்லாம் நடக்கிற கதையா... என்று பஞ்சாயத்தில் தீர்ப்பு வரும். அப்படியே 3 பட வழக்கையும் சேர்த்து மூட்டை கட்டிவிடலாம் அல்லவா?
இப்படி முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தையை கற்று வைத்திருக்கும் தனுஷின் ராஜதந்திரத்தை எண்ணி விய(ர்)க்கிறது கோடம்பாக்கம்.
No comments:
Post a Comment