சொந்தக்கதையை படமாக்குவேன் என்று சொன்னாலும் சொன்னார். கோடம்பாக்கத்தில் நாலு தீயணைப்பு வண்டிகளும், ஒன்றிரண்டு
ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் இருக்கிறதாம். அப்படி ஒரு திகில் பிடித்து அலைகிறது மேற்படி ஏரியா. சொன்னவர் சோனா. பதறுகிறவர்கள் யார் யார் என்றுதான் உங்களுக்கு தெரியுமே!

பிரபல புலனாய்வு இதழில் அரசல் புரசலாக தனது அவஸ்தைகளை தொடராக எழுதிய சோனா, படமாக எடுக்கும்போது இன்னும் பட்டவர்த்தனமாக எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். இப்படத்தில் அவரே பல கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதால் உடலை இளைக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார். நமீதாகிட்ட டிப்ஸ் கேட்கலாம்னா அவங்க முயற்சியே ரிவர்சுல போயிட்டு இருக்கு. இந்த மாதம் பத்து கிலோ இளைக்கணும்னு அவங்க நினைச்சா பத்து ப்ளஸ் ரெண்டு என்கிற அளவுக்கு எடை கூடிக் கொண்டே போகிறது அவருக்கு. அதுமட்டுமல்லாமல், நமீதாவுக்கும் சோனாவுக்கும் நாலாம் பொருத்தம் வேறு. அது போகட்டும்... இந்த புதிய படத்தை சோனா துவங்குவதற்கு முன்பாக சென்னையிலிருக்கும் தனது யூனிக் நிறுவனத்தை மேலும் நாலு சிட்டிகளில் விரிவாக்கம் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறாராம்.
நாலு இடத்துல வர்ற வருமானத்தை ஒரு இடத்தில் கொட்டணும்னு முடிவெடுத்துட்டாரு போல...
No comments:
Post a Comment