எனக்கும் த்ரிஷாவுக்கும் எந்த பிரச்சனையுமில்ல, மீடியாதான் பிரச்சனை அது இதுன்னு து£ண்டிவிடுது என்று ஓப்பன் பேட்டி கொடுத்திருக்கிறார் நயன்தாரா.
ஆனால் நயன்தாரா சென்னையில் கால் வைத்த நாளில் இருந்தே இருவரும் போனில் பிலுபிலுவென பிடித்துக் கொண்டு உருண்ட கதையை யாரிடம் சொல்ல? என களுக்கென சிரித்து மேலும் இந்த பிரச்சனையில் சுளுக்கு விழ வைக்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமான சோர்ஸ்கள்

அப்படியென்ன பிரச்சனை இருவருக்கும், அதுவும் இவ்வளவு காலம் கழித்து? சில வருடங்களுக்கு முன் தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க 75 லட்ச ரூபாய் முன் பணம் கொடுத்திருந்தாராம் லிங்குசாமி. அதை வாங்கிக்கொண்டு கால்ஷீட் கொடுக்காமல் கம்பி நீட்டி விட்டார் நயன். பணத்தை திரும்ப கைப்பற்ற எவ்வளவோ போராடியும், என் தேதிகளை நீங்க வேஸ்ட் பண்ணிட்டீங்க. தர முடியாது என்று மறுத்துவிட்டார் அவர். இடைபட்ட நேரத்தில் மேற்படி படத்தில் வேறொரு நடிகை நடித்தார்.
லிங்குசாமி கம்பெனியை பொருத்தவரை நான்தான் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்கிற மாதிரி நடந்து கொள்வார் த்ரிஷா. இந்த புதுப்படத்திற்கு தன்னை அழைக்காமல் நயன்தாராவை அழைத்தார்களே என்ற கோபம் வந்துவிட்டதாம் த்ரிஷாவுக்கு. அதனால்தான் போன் போட்டு பொங்கி வெடித்தாராம்.
நியாயமாக இந்த வெடியை த்ரிஷா வேறு இடத்திலல்லவா பற்ற வைத்திருக்க வேண்டும்?
No comments:
Post a Comment