Breaking News

Friday, 20 April 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்




'ரத்தம் பார்க்காம ஓயறதில்ல' என்ற வெறியோடு திரியும் கோடம்பாக்கத்தின் பிளேடு பக்கிரிகள் சிலர், கொஞ்ச நாளைக்கு ஓ.கே ஓகே டைரக்டர் ராஜேஷிடம் 'அப்ரசண்டாக' சேர்ந்தால் அடுத்த ஜென்மத்துக்காவது பர்மனன்ட் ஜாப் உறுதி. தம்மாத்துண்டு கதையை வைத்துக் கொண்டு எம்மாம் பெரிய ஷோ நடத்துராங்கப்பா...! இந்த சிரிகிரி அசெம்பிளியில் ஸ்பெஷல் மார்க் எடுத்து பாஸ் பண்ணியிருக்கிறார் 'வருங்கால தமிழகம்' என்று உடன்பிறப்புகளால் கொஞ்சப்படும் உதயநிதி. ஒரு படத்துக்கு ரெண்டு தடவ டப்பிங் பேசுன ஒரே ஆர்ட்டிஸ்ட் நானாதான் இருப்பேன் என்று ஒப்புக் கொள்கிற தைரியமும், சுய பரிசோதனையும் எந்த ஆர்ட்டிஸ்டுக்கு இருக்கு? அதுக்காகவே ஒரு ஸ்பெஷல் நமஸ்காரமண்ணே!

மைலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் அடிக்கடி சந்திக்கிற பாடி லாங்குவேஜுடன் சந்தானம். அவருக்கு பக்கபலமாக உதயநிதி. ரெண்டு பேருக்கும் கிடைக்கிற காதலிகளும், அவர்கள் இவர்களை படுத்தி எடுப்பதுதான் முழு படமும். விட்டால் புளிக்க புளிக்க ஊத்தப்பம் போடுகிற கதைதான். ஆனால் அந்த ஊத்தப்பத்தின் மீது டைரக்டர் தெளிக்கிற மசாலா ஐட்டங்கள் இருக்கிறதே, அதுதானய்யா ருசி.

டிராபிக் சின்னலில் ஹன்சிகாவை பார்த்த முதல் பார்வையிலேயே பேஸ்த் ஆகித் திரியும் உதயநிதி, விரட்டி விரட்டி காதலிக்கிறார் அவரை. ஹன்சிகாவோ எல்லா பெண்களையும் போல எதுக்கு அவன் கூடல்லாம் சேர்ற? என்று சந்தானத்தை கட் பண்ண சொல்ல, அதே கதைதான் சந்தானத்தின் விஷயத்திலும். அங்கேயும் ஒரு மொக்கை பிகர் சந்தானத்திற்கும் உதயநிதிக்கும் நடுவே பேஸ்மென்ட் எழுப்பி பில்டிங் கட்டுகிறது.

எல்லாத்தையும் மீறி எப்படி சேர்ந்தது ஜோடிகள்? கொஞ்சமும் யோசிக்காமல் லாஜிக்கை மடித்து 'டஸ்ட் பின்'னில் எரிந்துவிட்டு போனால், மூணு மணிநேரம்.... தொடர்ந்து படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  http://bit.ly/HYHEDj

No comments:

Post a Comment

Designed By Blogger Templates