Breaking News

Sunday, 29 April 2012

அங்கே போச்சு மார்க்கெட் இங்கே வந்த இலியானா?


ஊரே கூடி வேடிக்கை பார்க்கிற கடை தெருவாகதான் இருக்கட்டுமே, அதற்கும் பூட்டு நேரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அப்படிதான் ஆகியிருக்கிறது Ileanaஇலியானாவின் மார்க்கெட் நிலவரமும். காந்தக் கண்ணழகி, கையளவு இடுப்பழகி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இலியானாவுக்கு தற்போது நேரம் சரியில்லை. சில ஹீரோக்களை இவர் வெறுத்த காலம் போய், இவரை வெறுக்கிற காலம் வந்துவிட்டதாம் ஆந்திராவில்.
பாழாய் போன ஜீரோ சைஸ் உடல்வாகும், இளைக்கவே இளைக்காத அவரது சம்பளமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் ஆந்திராவை நேசிக்க அவருக்கு பிராந்து பிடித்திருக்கவில்லையே?
சமீபத்தில் சென்னைக்கு வந்தவர் முக்கியமான இரண்டு இயக்குனர்களை தனது அறைக்கு வரவழைத்தாராம். சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தவர், தனக்காக ஒரு கதையை உருவாக்க சொன்னாராம்.
'ஆமென்' என்று ஆமோதித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள் இருவரும். சொத்தை மாங்காயா இருந்தாலும் அதையும் கூறுகட்டி விற்றுவிடுவார்கள் கோயம்பேட்டில். இலியானா விஷயத்தில் கோடம்பாக்கம் இப்போ கோயம்பேடாகி நிற்கிறது.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates