Breaking News

Friday, 20 April 2012

கேரளாவுக்கு டவுன் டவுன் நடிகையான தமிழ் பொண்ணு


எதுக்கெடுத்தாலும் கேரளா பக்கமே லுக் விடுறாங்களே, மெட்ராஸ்ல அழகான பொண்ணுங்களே இல்லையா? என்று கொடி பிடிக்காத குறையாக கூவிக் கொண்டிருக்கும் லட்சோப லட்சம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்கும் விபா என்ற இளம் அழகியை தன் படத்தில் ஹீரோயினாக்கி தீராத பாவத்தை தீர்த்தம் விட்டு கழுவியிருக்கிறது ஒரு படம். பெயர் மதில் மேல் பூனை.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இந்த விபா. நேர்ல பார்த்தா நெய் தீபம் போல இருந்தாலும், ஆக்ஷன்னு இறங்கிட்டா அக்னி குஞ்சுதான் விபா என்று டெரர் ஆக்குகிறார் நம்மை அப்படத்தின் இயக்குனர் பரணி ஜெயபால். படத்தின் செகண்ட் ஆஃப் முழுக்க அடர்ந்த காட்டுக்குள் நடக்கிறதாம். காடுதானே, ஜாலியா இருக்கும்னு நினைச்சு போயிட்டோம். ஒரே மழை. கால் வைக்கிற இடமெல்லாம் சொத சொத... அது மட்டுமா, ஓரே பூச்சிக்கடி. எப்படியோ படப்பிடிப்பை முடிச்சுட்டு வர்றதுக்குள்ளே பாதி ரத்தம் போயிருச்சு என்றார் விபா. (அதுவும் பொண்ணுங்கன்னா விழுந்து விழுந்து கடிச்சு வைக்குங்களே...)

அதென்ன மதில் மேல் பூனை? மாணவர்களின் இளம் பருவம் ரொம்ப முக்கியமானது. கற்றுக் கொடுக்கிற ஆசிரியர்களும், உடன் வருகிற நண்பர்களும் சரியா அமையலேன்னா நம்மோட எதிர்காலம் எந்த பக்கத்திலே வேணும்னாலும் குதிச்சிரும். அதைதான் இந்த படத்தில் அழுத்தமா சொல்லியிருக்கிறோம் என்றார் டைரக்டர் பரணி ஜெயபால்.

சினிமா எதை வேணும்னாலும் பொறுத்துக் கொள்ளும். சென்ட்டிமென்ட் விஷயத்தில் மட்டும் மாறாத அரக்கன் அது. சினிமாக்காரர்கள் அலறும் பூனை என்ற சகுனத்தை படத்திற்கு வைச்சிருக்கீங்களே என்றால், சட்டென்று புன்னகைக்கிறார் பரணி.
உங்களுக்கு தெரியுமா? பூனைன்னா ஐஸ்வர்யம்னு அர்த்தம். இந்த பொல்லாத சென்ட்டிமென்ட்டை உடைச்சுக்காட்டுற படமா இது இருக்கும் என்றார்.
அவ்வண்ணமே கோரும்.... -தமிழ்சினிமா ரசிகர்கள்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates