இல்லேங்கறதையும், ஆமாங்கறதையும் அவ்வளவு அழகா சொல்ல முடியுமா? 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை ஆயிரம் தடவை பார்த்தாலும் அலுக்காத கேள்வி இது.
இந்த காட்சியில் ஜெயப்ரதாவின் எக்ஸ்பிரஷனுக்காகவே இன்னொரு முறை
எம்.பியாக்கலாம் அவரை. போகட்டும்... இப்படத்தின் உலக உரிமை ராஜ் டி.வி வசம் இருக்கிறது. இதில் ரஜினியும் கமலும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய துடிக்கிறதாம் அந்நிறுவனம்.

ரஜினியும் கமலும் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும் என்று திரைமேல் விழி வைத்து காத்திருக்கும் லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. இந்த நேரத்தில்தான் இப்படி ஒரு முயற்சி.
விஷயம் லீக் ஆவதற்குள் இதை மோப்பம் பிடித்துவிட்ட விநியோகஸ்தர்கள் இப்பவே பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வர ஆரம்பித்திருக்கிறார்களாம்.
தும்முற யானையை தூரத்தில வச்சாலும், சாரல் வந்து சட்டைய நனைக்கும்ங்கறது இதுதானோ?
No comments:
Post a Comment