ஷங்கர் படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வமற்ற செய்தி கிளப்பிவிடப்பட்ட அடுத்த நாளே ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்
என்ற தகவலும் உடனடியாக வெளியிடப்பட்டது.

நண்பன் படத்தில் நடிக்க ஆயிரம் கண்டிஷன்கள் போட்டு ஷங்கரை அலற வைத்த சூர்யா, இந்த முறையும் அதே ஸ்டைலை போட்டு தாக்க, மறுபடியும் ஷங்கரின் படம் கை நழுவிப் போயிருக்கிறது அவருக்கு. இதை மூடி மறைக்கும் விதத்தில்தான் இந்த ஹரி பட அறிவிப்பு என்கிறார்கள்.
கரிகாலன் டிராப், தாண்டவம் படத்தில் நம்பிக்கையில்லை, சமீபத்தில் வெளிவந்த ஐந்து படங்களும் தொடர் பிளாப். இதெல்லாம் கிலியை ஏற்படுத்திய காரணத்தால் ஷங்கரிடம் போய் விடாப்பிடியாக இந்த வாய்ப்பை பெற்றாராம் விக்ரம். இருந்தாலும் முறையான அறிவிப்பு வருகிற வரைக்கும் இந்த படத்திற்கும் உத்தரவாதமில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
No comments:
Post a Comment