Breaking News

Tuesday, 27 March 2012

ஏ- வை நோக்கி பில்லா 2 அஜீத் பட வியாபாரத்தில் இழுபறி


எப்பவுமே மே 1 ந் தேதியான தனது பிறந்த நாளில் தன்னோட படங்களை ரிலீஸ்Billa 2 செய்வதில் ஆர்வம் காட்டும் அஜீத்துக்கு, இந்த முறை அந்த ஆசை கை கூடாது போலிருக்கிறது. வேக வேகமாக பில்லா-2ஐ உருவாக்கிக் கொண்டிருந்தாலும் மே இறுதியில்தான் படத்தை வெளியிட முடியுமாம்.
ரிலீஸ் எப்ப வேணா ஆகட்டும். படத்தை இப்ப கொடுத்திருங்க என்று கால்கடுக்க காத்திருக்கும் ஹோல்சேல் விநியோகஸ்தர்களில் அதிகமுக்கியமானவராக கருதப்படுகிறார் பாரிவேந்தர். சினிமாவுக்குள் 'புதிய தலைமுறை'யாக அடியெடுத்து வைத்திருக்கும் இவரை குபேர மூலையாக நினைத்து கும்பிட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
அப்படிப்பட்டவருக்கு பில்லாவை கொடுக்க சம்மதித்த தயாரிப்பு தரப்பு பெரும் விலை சொல்கிறதாம். அதற்கும் தயாராகிவிட்டார் வேந்தர். ஆனால் ஒரு சிக்கல். படத்தின் கான்சப்ட் மற்றும் சண்டை காட்சிகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் ஏ தான் கிடைக்குமாம். ஏ சர்டிபிகேட் படங்களுக்கு 30 சதவீத வரியை தனியாக செலுத்த வேண்டும். இந்த வரிக்காகவாவது விலையை குறைச்சுக்க கூடாதா என்கிறார்களாம் வேந்தர் தரப்பில்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates