Breaking News

Wednesday, 14 March 2012

சேவற்கொடி - விமர்சனம்.....



திருச்செந்தூர் மீனவ கிராமத்தில் செய்யாத தப்புக்கு கருவாடாகிப் போகிற ஒரு காதலனின் கதைதான் இந்த சேவற்கொடி. உப்பு கண்டம் ருசிதான். அதுவே உப்பு ஜாஸ்தியானால்? சில இடங்களில் அப்படியும் கரிக்க வைக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஹீரோ அருண் பாலாஜி. இவருக்கும் வில்லன் பவனுக்கும் வருகிற பிரச்சனை இருக்கிறதே, அதுதான் சரியான வில்லங்கம்.

தங்கச்சிய கட்டிக்கோ, ஓட்டுற வேனுக்கு நானே ஓனராகிக்கிறேன் என்று முதலாளிக்கு வாக்குறுதி கொடுக்கிறார் பவன். ஆனால் அந்த பாசக்கார தங்கச்சியோ தனது காதலனுடன் ஓடிவிட, காதல் ஜோடியை அனுப்பி வைத்ததே அருண் பாலாஜிதான் என்று தவறாக நினைக்கிறார் பவன். இத்தனைக்கும் இந்த சம்பவத்தில் ஒரு தொடர்பும் இல்லை ஹீரோவுக்கு.

என் வலி அவனுக்கும் தெரியணும் என்று நினைக்கிற பவன், அருண் பாலாஜியின் அம்மாவை லாரி ஏற்றி கொன்றேவிடுகிறார். (ஆடியன்சின் பரிதாபத்தை அப்படியே அள்ளிக் கொள்கிற அளவுக்கு ஒளிவீசும் முக லட்சணம் அந்த அம்மாவுக்கு) இது எதிர்பாராத விபத்துதான் என்று நினைக்கிற ஹீரோவுக்கு, அதே பவன் வாயால் உண்மை தெரியவர, ஆரம்பிக்கிறது வார்! நார் நாராக கிழித்துக் கொள்கிறார்கள் இருவரும். ஒருகட்டத்தில் தனது புஜ பராக்கிரமத்தால் பவனை நிர்வாணமாகவே ஆக்கி நையப்புடைக்கிறார் அருண். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத பவன் அருணை போட்டுத்தள்ள கூலிப்படையை நாடுகிறார்.

இந்த பகையின் முடிவெங்கே? அதுதான் ரெண்டரை மணி நேர சே.கொ.

அந்த ஊரில் எல்லாருமே அரையிருட்டாக இருக்க, கதாநாயகி பாமா மட்டும் ட்யூப் லைட்டாக ஜொலிக்கிறார். 'உன் மூக்கு மேல வேர்வையாகணும்' என்று வைரமுத்து எழுதிய ஒவ்வொரு வரிக்கும் உயிர் கொடுக்கிற இந்த நாயகி மீது, அருண் பாலாஜிக்கு வருகிறது லவ். ஒரு கொசு அடிக்கிற நேரத்தில் வருகிற இந்த லவ்தான் ஆரம்பத்தில் ஒட்டவில்லையே தவிர, ஜோடிகள் ரெண்டும் கண்ணுக்குள் 'பச்சக்' என ஒட்டிக்கொள்கிறார்கள்.

முதலில் பாமா பவனின் தங்கையோ என்பது போல ஒரு ட்விஸ்ட் அடிக்கிறார் டைரக்டர். அப்புறம் அது வழக்கமான சினிமாவாகிவிடும் என்று நினைத்திருக்கலாம். ரூட்டை மாற்றிக்கொள்கிறார். பாமாவின் குடும்ப பின்னணியும் இவரது காதலுக்கு பெற்றவர்களின் சம்மதமும் ரொம்பவே இயல்பு.

அருண் பாலாஜி நீச்சல் வீரராம். நடிப்பு என்பது சமுத்திரமல்லவா? குழந்தை தத்தளிக்கிறது. சிகரெட்டு புகையும் செம்பட்டை தலையுமாக இவரை பார்க்கும்போதெல்லாம் 'ஐயோ என் தமிழ்சினிமாவே' என்று அலறத் தோன்றுகிறது. ...............

No comments:

Post a Comment

Designed By Blogger Templates