Breaking News

Wednesday, 28 March 2012

குளிச்சா படம் ஓடும் ஜலதோஷ தமன்னா


புழலேரி உடைஞ்சா கூட அதுல நாலு ஃபிகர்களை புரட்டி எடுத்து அதையும் ஒருTamannaஃபுட்டேஜ் ஆக்கிறாலாமா என்ற நினைப்புதான் இருக்கும் கமர்ஷியல் இயக்குனர்களுக்கு. தன் படங்களில் எல்லாம் ஒரு மழைப்பாடல் இருந்தால் அந்த படம் ஹிட் என்று தமன்னா நம்புகிறாரோ இல்லையோ? அவரை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்கள் நம்புகிறார்கள்.

இந்த பாடாவதி சென்ட்டிமென்ட் படுத்துகிற பாட்டில், தனது மூக்கு பிரதேசமே 'சிவந்தமண்' ஆகிற அளவுக்கு ஜலதோஷம் பிடித்து திரிகிறார் தமன்னா, அதுவும் ஒவ்வொரு படத்திலும். (யாராவது கர்சீப் கம்பெனிக்காரன் விளம்பரத்தில் நடிக்க கூப்பிடுவான்)

பையா படத்தில் அவருக்கு ஒரு மழைப்பாட்டு வைத்திருந்தார் லிங்கு. அந்த படம் மகா மெஹா ஹிட். இந்த சென்டிமென்ட் அப்படியே நாடு விட்டு நாடு ஷிப்ட் ஆகி ஆந்திராவிலும் பரவிவிட்டதாம். அவர் நடிக்கும் எல்லா படத்திலும் லாரி லாரியாக தண்ணீரை அள்ளிவந்து தமன்னாபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates