Breaking News

Wednesday, 28 March 2012

ஜெய் கமிட்டான 'பெரிய இடம்' சரிகட்டிய சம்பளம்


தமிழ் சினிமாவை பொருத்தவரை பெண் இயக்குனர்களுக்கான நாற்காலி, உடைந்துJaiபோன முக்காலியாகவே இருக்கிறது. இந்த முக்காலியை தூக்கி நிறுத்தி, நாலு பக்கமும் ஆணியடிக்கிற திராணி ஒருவருக்குமே இல்லை. இது குறித்தெல்லாம் தமிழன் தன் தூக்கத்தில் கூட கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் ரஜினி மகள் ஐஸ்வர்யாவும், உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் படம் இயக்க வந்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யாவின் 3 இன்னும் சில தினங்களில் கடைத்தெருவுக்கு வந்துவிடும். நிலைமை முக்காலியா, நாற்காலியா என்பது அப்போது தெரிந்துவிடும். இவரைப்போலவே துடிப்போடு களம் இறங்கியிருக்கும் கிருத்திகாவின் வேகம் எப்படி?
ஒரு குழப்பமும் இல்லை. முதலில் இப்படத்தில் கணவரையே நடிக்க வைக்கலாம் என்று அவர் கருதினாரோ, இல்லையோ? உதயநிதிதான் நடிக்கிறார் என்று கொளுத்திப் போட்டது மீடியா. இதுகுறித்து அதிக சப்தமில்லாமல் மீடியமாகவே கோபப்பட்ட கிருத்திகா, இன்னும் சில தினங்களில் தனது பட ஹீரோவை பளிச்சென்று அறிவிக்கப் போகிறார்.

ஜெய்தான் அந்த ஹீரோ. பிடிக்காத தயாரிப்பாளர்களை எப்படி விரட்டி விடுவது என்பதை மூன்று மாதம் கோர்ஸ் எடுத்து படித்துவிட்டு வந்தவர் ஜெய். அப்படி பலரை விரட்டி கடைசியாக அவர் சம்மதித்த இடம்தான் இந்த படம். ஜெய்யை மடக்கியது கிருத்திகாவின் கதையா தெரியாது. ஆனால் அதைவிட வலுவான சம்பளமாம்!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates