Breaking News

Wednesday, 28 March 2012

போம்போது மூணு வரும்போது ஒன்றரை?


மூணு படத்தின் மார்க்கெட் வேல்யூ 'மூன்' வரைக்கும் ஏறி முட்டிக் கொண்டு நிற்கிறது. தாறுமாறான வியாபாரம், தலைக்கு ஏறிய புகழ் போதை என்று படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் நரம்புகளுக்குள்ளும்3ஆயிரம் வாட்ஸ் கரண்ட் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் இப்படத்தின் தணிக்கை காட்சியும் போடப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இந்த ஐஸ்வர்யா கொழுந்தனார் செல்வராகவனை மிஞ்சிவிடுவார் போலிருக்கே என்று ஆத்திரம் கொண்டார்களாம். செல்வராகவன் டைப் படம் என்றால் அதில் சந்தோஷப்படதான் விஷயங்கள் இருக்கும். அப்புறம் எப்படி இப்படியொரு கோவம்?

வேறொன்றுமில்லை, படத்தில் பரவிக்கிடக்கும் ஏ சமாச்சாரங்கள்தான் செல்வராகவனை மிஞ்சுகிற அளவுக்கு இருக்கிறதாம். வெட்டிட்டா சரி, இல்லேன்னா ஏ தான் என்று பிடிவாதமாக நின்றதாம் சென்சார். ஐயய்யோ வேணாம் என்று அலறியடித்த ஐஸ்வர்யா, பொங்கி வரும் ஆத்திரத்தோடு அத்தனையையும் நறுக்கிக் கொண்டிருக்கிறாராம்.
உள்ளே போகும் போது மூன்றாகவும், வெளியே வரும்போது ஒன்றரையாகவும் வந்தா இளசுகள் ஏ-மாந்துருவாங்களே...?

No comments:

Post a Comment

Designed By Blogger Templates