Breaking News

Thursday, 22 March 2012

கழுகு விமர்சனம்......



துணி சோப்பை போட்டு குளித்தாலும் வெளுக்காத அழுக்கு ஹீரோவை, நிலாவின் தங்கச்சிகள் காதலிப்பதுதான் தமிழ்சினிமாவின் அண்மைகால பி.பீ.கோ (பிலிம் பீனல் கோட்) கழுகும் அப்படிப்பட்ட படம்தான். ஆனால் எள்ளல், நக்கல் எல்லாவற்றையும் தாண்டி, விக்கல் எடுக்க வைக்கிறது அந்த க்ளைமாக்ஸ்.

கொடைக்கானலின் தற்கொலை பாறைதான் ஹீரோவின் புரபஷனல் ஏரியா. அங்கு தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மூவாயிரம் அடிக்கு கீழே சென்று மீட்டெடுக்கிற இவரும் இவரது சகாக்களும் அடிக்கிற கூத்துகளும், அடைகிற அவஸ்தைகளும்தான் படம்.

டைட்டில் முடிந்த நாற்பதே செகண்ட். பொட்டென்று ஒரு பிணம் விழுகிறது. அது காதல் ஜோடியின் உருக்கமான மரணம். பள்ளத்தில் உடல்களை தேடிச்செல்லும் கிருஷ்ணா அண் கோவினர் சுமார் ஒரு ரீலுக்கு பேசியதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிணம் மேலே வந்த அடுத்த நொடியே கதையும் கயிறை பிடித்துக் கொண்டு மேலே ஏறுகிறது. அதன் பின் எல்லாமே விறுவிறு...

ஆசை ஆசையாக தங்கச்சிக்கு போட்ட அந்த மோதிரம் கிருஷ்ணா கையில் ஜொலிக்க, சட்டென்று அதை பற்றிக் கொண்டு முத்தம் கொடுக்கிற பிந்துமாதவியின் காதல், எழவு வீட்டில் நாதஸ்வரமாகி ஒட்டாமல் போனாலும் மீண்டும் பொருந்துவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கிருஷ்ணாவின் அதிகபட்ச லட்சியம் ஒன்றரையணா பீடியும், ஒரு குவார்ட்டருமாகவே இருக்கிறது. ஆனாலும் விரட்டி விரட்டி காதலிக்கிறார் பிந்து மாதவி.

ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவின் உச்சி முடியை பற்றி இழுக்கிறது காதல். கல்யாணமும் உடனே நடக்க, ஜோடிகளின் வாழ்க்கை பயணம் எப்படி? நெஞ்சுக்குள் ஆர்டிஎக்சை கொளுத்தி வைத்து வணக்கம் போடுகிறார் இயக்குனர் சத்யசிவா. வீடு வந்து சேரும் வரைக்கும் பைக்கின் வீல் நழுவ நழுவ தவிக்கிறது மனசு.

பின் கையை மடித்துக் கொண்டும் மறு கையால் பீடியை வலித்துக் கொண்டும் ஒரு பிணம் து£க்குகிறவனின் துல்லியமான பாடிலாங்குவேஜுடன் திரிகிறார் கிருஷ்ணா. நடிக்க வந்த மூணாவது படத்திலேயே ரிஸ்க்கான கேரக்டர். (தைரியம்ப்பா... )உடனிருக்கும் சகாக்கள் எல்லாம் இயல்பான மேக்கப்பில் இருக்க... 

தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
http://bit.ly/zE2rml

No comments:

Post a Comment

Designed By Blogger Templates