காதலுக்கு இதயம் முக்கியமா வேணும். ஆனா இப்ப வர்ற காதலுக்கெல்லாம் இதயம் அவசியமான்னு தெரியல. ஆனா மூளை ரொம்ப முக்கியம்.
கால்குலேஷனோடதான் காதலிக்கிறாங்க எல்லாரும். ஒரு தொலைக்காட்சியில் இப்படி குமுறி குமுறி பேட்டியளித்திருக்கிறார் சிம்பு.

இப்படி ஒரு 'வீரவணக்க' உரையை அவர் ஆற்றியதற்கு பின்னாலிருக்கும் வலி ஊருக்கே தெரிந்த கிலி. அதனால் இதை குறை சொல்லவும் முடியாது. இரையான மீனுக்குதானே இரைப்பையோட ஸ்பீடு தெரியும்!?
போகட்டும்... அதற்கு பிறகு அவர் பேசியதுதான் டோன்ட்கேர் சமாச்சாரம். என்னைய பற்றி தப்பு தப்பா எழுதறாங்க. ட்விட்டர்ல நியூஸ் போடுறாங்க. அவங்களுக்கெல்லாம் இத தவிர வேற வேலையே இருக்காதுன்னு நினைக்கிறேன். அவங்கள்ளாம் எழுதறாங்கன்னு நான் ஃபீல் பண்ணவே மாட்டேன். இப்படி எழுதறதால யாராவது என்னை வச்சு படம் பண்ணாம இருக்காங்களா? அல்லது நான்தான் சம்பாதிக்காம இருக்கேனா? கோடி கோடியா சம்பாதிக்கிறேன். ஹேப்பியா இருக்கேன். எழுதறவங்க எழுதட்டும். நான் இப்ப இருக்கிற மாதிரிதான் எப்பவும் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
தன்மான சிங்கத்தின் வாரிசல்லவா? இருமுனாலும் கர்ஜனைதான், உறுமுனாலும் கர்ஜனைதான்.
No comments:
Post a Comment