டைரக்டர் பாலாவை பொறுத்தவரை பேச்சும் பார்வையும் கூட ஸ்ரெயிட்தான். கத்தி ஒன்று, கட்டிங் ரெண்டு என்றே பேசுவார். அது சரியா, தப்பா என்பதெல்லாம் அவருக்கு அவசியமில்லாத ஒன்று. தற்போது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் படத்திற்கு எரிதணல் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் பளிச்சென்று தனது பட டைட்டிலை அறிவித்திருக்கிறார் அவர். பரதேசியாம்.
பரதேசி என்ற தலைப்பு அவருக்கு எப்படி தோன்றியது. ஏன் தோன்றியது என்பதையெல்லாம் யோசிக்க தேவையில்லை. கதைக்கு நெருக்கமாகதான் இருக்கும் அவர் வைக்கும் தலைப்புகளும். இந்த பரதேசிக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இதைதான் இந்த நேரத்தில் சொல்லத் தோன்றுகிறது நமக்கு.
ஒரு முறை அவருக்கு சால்வை அணிவித்தார்கள் சில பத்திரிகையாளர்கள். அது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. அங்குதான் நடந்தது இந்த மரியாதைக்குரிய விஷயமும். சால்வையை ஏற்றுக் கொண்ட பாலா என்ன சொன்னார் தெரியுமா? இந்த சால்வையை எனக்கு போர்த்தியதற்கு பதிலா ஒரு பரதேசிக்கு போர்த்தியிருந்தா அவருக்காவது உதவியிருக்கும்.
பாலாவின் மனசில் பரதேசிக்கும் ஒரு இடம் இருக்கிறதய்யா...
No comments:
Post a Comment